உண்மையை உடைத்த ஜாண்டி ரோட்ஸ்

0 DD
0 DD

தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரரான ஜாண்டி ரோட்ஸ் தான், இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளராக ஏன் தெரிவு செய்யப்படவில்லை என்ற காரணத்தை முதன் முதலில் கூறியுள்ளார்.

இந்திய அணிக்காக சில மாதங்களுக்கு முன்னர் பீல்டிங், பேட்டிங், பந்து வீச்சு போன்ற பயிற்சியாளர்களுக்கான விண்ணப்பம் பிசிசிஐ சார்பில் கோரப்பட்டது.

இதற்கு பீல்டிங் பயிற்சியாளராக, தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரரான ஜாண்டி ரோட்ஸ் விண்ணப்பித்திருந்தார்.

இந்திய ரசிகர்கள் அனைவரும் ஜாண்டி ரோட்ஸ் தான் இந்திய அணியின் படுத்த பீல்டிங் பயிற்சியாளர் என்று நினைத்து கொண்டிருந்த போது, அவரை நிராகரித்துவிட்டு, பிசிசிஐ இந்திய அணிக்கு பீல்டிங் பயிற்சியாளராக இருக்கும் ஸ்ரீதரை மீண்டும் தெரிவு செய்தது.

உலகத்தரம் வாய்ந்த பீல்டராக பார்க்கப்பட்ட, ஜாண்டி ரோட்ஸ் ஏன் தெரிவு செய்யப்படவில்லை என்ற காரணம் தெரியாமல் இருந்தது. ரோட்சும் அதைப் பற்றி பேசவில்லை.

இந்நிலையில் இந்திய ரசிகர் ஒருவர், இந்திய அணியின் பீல்டிங் மோசமாக உள்ளது நீங்கள் ஏன் பீல்டிங் பயிற்சியாளராக இருக்க கூடாது என்று கேட்டார்

இதற்கு ஜாண்டி ரோட்ஸ், அவர்கள் என்னை வேண்டாம், நன்றி என்று கூறிவிட்டார்கள். முதல் 3 இடங்களுக்குள்ளும் என்னை அவர்கள் தெரிவு செய்யவில்லை என்று தன்னுடைய வருத்ததினை பதிவு செய்தார்.

ஸ்ரீதர் தலைமையிலான இந்திய அணி கடந்த பல ஆண்டுகளாக பீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருவதால் அவரை மாற்றும் எண்ணம் இல்லை என்பதால் அவரை மீண்டும் இந்திய அணி நிர்வாகம் தேர்வு செய்ததாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.