வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்த இங்கிலாந்து ;இலங்கை கிரிக்கட்

2 VFD
2 VFD

இங்கிலாந்து அணிக்கும், இலங்கை கிரிக்கட் பதினொருவர் அணிக்கும் இடையிலான பயிற்சி டெஸ்ட் கிரிக்கட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்தது.

கட்டுநாயக்க மைதானத்தில் இடம்பெற்ற மூன்று நாட்களைக் கொண்ட இந்த பயிற்சிப் போட்டியின் இறுதி நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது.

போட்டியில் இங்கிலாந்து அணி தமது முதல் இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 316 ஓட்டங்களைப் பெற்றது.

பின்னர், தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை கிரிக்கட் பதினொருவர் அணி, 245 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

இதையடுத்து, தமது இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி, 7 விக்கட்டுக்களை இழந்து 320 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில், இறுதி நாள் ஆட்டம் நிறைவடைந்தது.