இன்றைய நாளில் உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது இந்திய அணி

indiaworldt20
indiaworldt20

ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களாலும் மறக்க முடியாத இன்றைய நாளில் இந்திய அணி 12 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி T20 உலகக்கோப்பையை வென்றது.

T20 உலககோப்பை தொடர் முதன் முறையாக கடந்த 2007ம் ஆண்டு நடைபெற்றது. ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், இங்கிலாந்து, இந்தியா, கென்யா, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஸ்காட்லாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, மேற்கிந்திய தீவுகள், சிம்பாவே உள்ளிட்ட நாடுகள் கலந்து கொண்ட T20 தொடர் தென்னாபிரிக்காவில் நடைபெற்றது.

இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி தோனி தலைமையில் இளம் வீரர்களுடன் களமிறங்கிய இந்திய அணி 5 ஒட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் டT20 உலகக்கோப்பையை கைப்பெற்றியது.

2007-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை வென்ற பிறகு இந்திய அணி ஒரு முறை கூட வென்றதில்லை. 2014 இல் பங்களாதேசில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இலங்கை அணியிடம் கிண்ணத்தை பறிகொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அடுத்த T20 உலககோப்பை தொடர் 2020-ம் ஆண்டு அவுஸ்ரேலியாவில் நடைபெறவுள்ளது.