சென்னை திரும்பினார் வாள்வீச்சு வீராங்கனை

download 1 3
download 1 3

கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே இந்தியாவின் சர்வதேச வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி இத்தாலியில் இருந்து மீண்டும் சென்னைக்கு வந்துள்ளார்.

முன்னதாக கொரோனா வைரஸ் பீதியால், இத்தாலியில் பெரும்பாலான விளையாட்டு போட்டிகள் நடத்தப்படாமல் ஒத்திவைக்கப்பட்டன.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு, கிரேக்கத்திற்கும் இத்தாலிக்கும் இடையிலான தனது பயிற்சி போட்டியின் போது விளையாடினார்.

இறுதியாக இந்த வார இறுதியில் நடைபெறவுள்ள உலகக் கோப்பைக்கு முன்னதாக பெல்ஜியத்தில் ஒரு ேபாட்டியில் பங்கேற்கும் சூழல் ஏற்பட்டது.

ஆனால், இத்தாலியில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு உச்சமடைந்ததால், அவர் அங்கிருந்து இந்தியாவுக்கு திரும்பினார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘சில விரைவான முடிவுகளை எடுத்ததால், வீடு திரும்பி உள்ளேன்.

லிவோர்னோவை காட்டிலும் பெரும்பாலான பாதிப்புகள் வடக்கில் இருந்ததால் அதிக பிரச்னை இல்லை.

ஆனால் நான் பெல்ஜியத்திற்கு ஒரு முகாமுக்கு புறப்பட்டேன்.

அதற்கு அடுத்த நாள் இத்தாலிய அரசாங்கம் முழு நாட்டையும் பூட்டியது.

அதிர்ஷ்டவசமாக நான் நாடு திரும்பினேன். நான் அங்கு இருந்தபோது, எங்கள் நகரத்தில் மக்கள் சாதாரணமாக இருந்தார்கள். வடக்கு பகுதி பற்றிய செய்திகளை மட்டுமே அச்சமூட்டுவதாக இருந்தது, ஆனால் எங்களுக்கு தொற்றுநோய் பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால், இத்தாலியில் என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை” என்றார்.