அலெக்ஸ் ஹேல்ஸூக்கு கொரோனா அறிகுறி?

download 3 2
download 3 2

இங்கிலாந்து அணியின் அதிரடி வீரர் அலெக்ஸ் ஹேல்ஸூக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததால் அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளபட்டுள்ளது.

சீனாவின் வுகானில் பரவத் தொடங்கிய கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக அங்கு மட்டும் 3 ஆயிரம் பேர் வரை உயிரிழந்தனர்.

தற்போது இங்கு நிலைமை கட்டுக்குள் வரும் அதே நேரத்தில் இத்தாலி, ஈரான் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா பரவுவது அதிகரித்து வருகின்றது. உயிரிழப்புக்களும் நூற்றுக்கணக்கில் உயர தொடங்கியுள்ளது.
உலக மக்களை அச்சத்தில் ஆழ்த்தி தனிமைச்சிறையில் முடக்கிப் போட்டிருக்கும் கொரோனா வைரஸ், விளையாட்டையும் விட்டுவைக்கவில்லை.

கோவிட்-19 தாக்குதலால் பல்வேறு துறைகளும் பாதிக்கப்பட்டு மிகப் பெரிய பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ள நிலையில் கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் உட்பட அனைத்து விளையாட்டு போட்டிகளும் ரத்து அல்லது ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.

அதன் அடிப்படையில் இந்தியா – தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா – நியூசிலாந்து இடையே நடைபெற இருந்த கிரிக்கெட் தொடர்கள் ரத்து செய்யப்பட்டது.

இந்தியாவில் ஐ.பி.எல் தொடரும் ஏப்ரல் 15ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் ரசிகர்கள் இல்லாமல் நடைபெற்றாலும் அந்த தொடரின் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் ஒத்திவைக்கபட்டு வெளிநாட்டு வீரர்கள் தங்களது சொந்த நாட்டிற்கு திரும்பி சென்றனர்.

இந்நிலையில் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் பங்கேற்ற இங்கிலாந்து பேட்ஸ்மேன் அலெக்ஸ் ஹேல்ஸூக்கு கொரோனா வைரஸ் தாக்கத்திற்கான அறிகுறிகள் இருந்தது.

இதனால் அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இருப்பினும் தற்போது வரை பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் கொரோனா அறிகுறி இருப்பதால் அவரே தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.