இங்கிலாந்து அணியின் புதிய பயிற்சியாளராகும் கேரி கிறிஸ்டன்

gary
gary

இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் ட்ரெவர் பெய்லிஸின் பயிற்சிக்காலம் முடிவடைந்துள்ள நிலையில் புதிய பயிற்சியாளரைத் தேடும் முனைப்பில் இங்கிலாந்து கிரிக்கட் வாரியம் ஈடுபட்டுள்ளது.

அதன்படி இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் ட்ரெவர் பெய்லிஸின் பயிற்சிக்காலத்தில் இங்கிலாந்து அணி சிறந்து விளங்கியுள்ளது. உலக கோப்பையை முதன்முறையாக
வென்று வரலாற்று சாதனை படைத்ததுடன் மேலும் பல சிறந்த பெறுபேறுகளை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அவரது பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், சிறந்த பயிற்சியாளர் ஒருவரை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தேடி வருகிறது.

இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் பரிசீலனையில் முதலில் இருப்பவர் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த கேரி கிறிஸ்டன். ஆனால் கிறிஸ்டன், இங்கிலாந்து ஒருநாள் அணிக்கு மட்டும் பயிற்சியாளராக விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அவ்வாறு செய்வதற்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் விரும்பவில்லை.

அதனால் மூன்றுவிதமான அணிகளுக்கும் கேரி கிறிஸ்டனை பயிற்சியாளராக நியமிக்கும் முனைப்பில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் உள்ளது.