பாகிஸ்தானில் இன்று இலங்கை அணி பலப்பரீட்சை

PAK
PAK

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் T20 தொடரில் விளையாடுவதற்கு இலங்கை அணியின் முன்னணி வீரர்கள் பலர் மறுத்துவிட்ட நிலையில் திரிமன்னே தலைமையிலான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி இன்று பாகிஸ்தான் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

பாகிஸ்தானின் கராச்சி நகரில் 10 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் முதல் ஒருநாள் போட்டியாக, இன்று நடக்கும் இலங்கை-பாகிஸ்தான் இடையேயான போட்டி அமைந்துள்ளது.

இலங்கை அணி அங்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 T20 போட்டிகள் கொண்ட இரண்டு தொடர்களில் விளையாடுகிறது. இதில் ஒருநாள் தொடர் முதலில் நடக்கிறது.

கராச்சியில் இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி, பகல்-இரவு ஆட்டமாக இன்று நடக்கிறது.

இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமருக்கு வழங்கப்பட்டு வரும் அளவிலான பாதுகாப்பு, இலங்கை வீரர்களுக்கு வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. அத்துடன் வீரர்கள் தங்கியுள்ள ஹொட்டல்கள், சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான பாதுகாப்பு படையினர் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டி அட்டவணை

ஒருநாள் தொடர்
முதலாவது ஒருநாள் போட்டி- இன்று (27.09.2019)
இரண்டாவது ஒருநாள் போட்டி- 30.09.2019
மூன்றாவது ஒருநாள் போட்டி- 02.10.2019

T20 தொடர்
முதலாவது T20- 05.10.2019
இரண்டாவது T20- 07.10.2019
மூன்றாவது T20- 09.10.2019