10 ஆண்டுகளின் பின் சொந்த மண்ணில் பாகிஸ்தான் வெற்றி!

usman
usman

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்களுடன் 10 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தான்-இலங்கை அணிகளுக்கிடையில் நடக்கும் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் சகல துறைகளிலும் பிரகாசித்து 67 ஒட்டங்கள் வித்தியாசத்தில் தனது வெற்றியை பெற்றுக்கொண்டுள்ளது.

இலங்கை அணியின் முன்னணி வீரர்கள் பலர் மறுத்துவிட்ட நிலையில் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு திரிமன்னே தலைமையிலான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி நேற்று பாகிஸ்தான் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியிருந்தது.

இந்நிலையில் பாகிஸ்தான் – இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று கராச்சி மைதானத்தில் பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட்டத்தை தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 305 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் அணி சார்பாக பாபர் அசாம் 115 ஒட்டங்களையும் (11-வது சதம்), பகர் ஜமான் 54 ஒட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 46.5 ஒவர்கள் நிறைவில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 238 ஒட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது. இலங்கை அணி சார்பில் ஷெஹான் ஜெயசூரிய 96 ஒட்டஙளையும் தசுன் ஷானக்க 68 ஒட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பாகிஸ்தான் சார்பில் 51 ஒட்டங்களுக்கு 5 விக்கட்டுக்களை வீழ்த்திய உஷ்மான் ஷென்வாரி ஆட்டநாயகனாக தெரிவுசெய்யப்பட்டார்.

இந்த வெற்றியுடன் பாகிஸ்தான் அணி இத்தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கின்றது.