இலங்கை அணி அபார வெற்றி

sl 1
sl 1

பாகிஸ்தானுக்கெதிரான முதலாவது T20 போட்டியில் இலங்கை அணி 64 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

பாகிஸ்தானுக்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட T20 தொடரில் பங்கேற்றுள்ளது. பாகிஸ்தான் அணி T20 தரவரிசையில் முதலிடத்திலும் இலங்கை அணி 8வது இடத்திலும் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடரின் முதலாவது போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் முதலில் களத்தடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய செய்த இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து 165 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இலங்கை அணி சார்பாக தனுஷ்க குணதிலக 57 ஒட்டங்களையும் அவிஷ்க பெர்னான்டோ 33 ஓட்டங்களையும் பானுக ராஜபக்‌ஷ 32 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பாகிஸ்தான் அணி சார்பாக மொஹமட் ஹஸ்னைன் 37 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுக்களை வீழ்த்தியிருந்தார். அத்துடன் ஒரு ஹட்ரிக்கினையும் நிகழ்த்தியிருந்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 101 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பாக நுவான் பிரதீப் 21 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுக்களையும் இசுறு உதான 11 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுக்களையும் வீழ்த்தியிருந்தனர்.

தனுஷ்க குணதிலக ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

இந்த வெற்றின் மூலம் T20 தொடரானது 1-0 என முன்னிலை வகிக்கிறது.

தொடரின் இரண்டாவது போட்டி எதிர்வரும் திங்கள் (Oct.07) நடைபெறவுள்ளது.