இறுதிக்கட்டத்தினை எட்டியுள்ள புரோ கபடி லீக்

vivoprokabaddilogo
vivoprokabaddilogo

இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு ஐ.பி.எல் (IPL) போன்று பாரம்பரிய விளையாட்டான கபடிக்கு, புரோ கபடி லீக் (Pro Kabaddi League) நடத்தப்பட்டு வருகிறது.

ஏழாவது சீசன் புரோ கபடி லீக் ஜூலை 20ம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் எதிர்வரும் 19ம் திகதி நிறைவடையவுள்ளது.

இத்தொடரில் மொத்தம் 12 அணிகள் கலந்துகொண்டு போட்டியிடுகின்றன.

  1. பெங்களூரு புல்ஸ்
  2. பெங்கால் வாரியர்ஸ்
  3. பட்னா பைரேட்ஸ்
  4. புனேரி பல்டன்
  5. தபாங் டெல்லி
  6. குஜராத் பார்சூன் ஜெயான்ட்ஸ்
  7. தமிழ் தலைவாஸ்
  8. தெலுங்கு டைட்டன்ஸ்
  9. ஹரியானா ஸ்டீலர்ஸ்
  10. ஜெய்பூர் பிங் பாந்தர்ஸ்
  11. யு மும்பா
  12. யுபி யோதா

இந்த தொடரில் 12 அணிகள் மூன்று மாதங்கள் வரை முதல் சுற்று ஆட்டங்களில் போட்டியிட்டிருந்த நிலையில் 06 அணிகள் பிளே ஓஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

புள்ளிப்பட்டிலில் முதலிரு இடங்களைப் பெற்ற தபாங் டெல்லி, பெங்கால் வாரியா்ஸ் அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

மற்ற 4 அணிகளும் எலிமினேட்டா் ஆட்டங்களில் போட்டியிட்டு வெற்றி பெறுகின்ற அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

வரும் அக்டோபர் 14ம் திகதி முதல் எலிமினேட்டர் போட்டியில் யுபி யோதா – பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதவுள்ள நிலையில், இரண்டாம் எலிமினேட்டரில் யு மும்பா – ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதவுள்ளன.

ஒக்.16ம் திகதி நடைபெறவுள்ள அரையிறுதி ஆட்டங்களில் முதலிடத்தில் உள்ள அணி, எலிமினேட்டா்-1 ஆட்டத்தில் வெல்லும் அணியுடனும், இரண்டாம் இடம் வகிக்கும் அணி, எலிமினேட்டா்-2 ஆட்டத்தில் வெல்லும் அணியுடனும் மோதுகின்றன.

இரு அரையிறுதி ஆட்டங்களிலும் வெற்றி பெறும் அணி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும்.

ஒக். 19ம் திகதி நடைபெறும் இறுதி ஆட்டத்தில் வெல்லும் அணி விவோ புரோ கபடி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும்.