உதவி பயிற்சியாளராகும் சந்திக ஹதுருசிங்க

hathuru 1 768x431 670x376 1
hathuru 1 768x431 670x376 1

அவுஸ்திரேலியாவின் நியூவ் சௌத் வேல்ஸ் கிரிக்கெட் அணியின் உதவி பயிற்றுவிப்பாளர் மற்றும் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக இலங்கை அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் சந்திக ஹதுருசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் 2010 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் நியூவ் சௌத் வேல்ஸ் அணிக்கு உதவி பயிற்றுவிப்பாளராக பணியாற்றியிருந்த நிலையிலேயே மீண்டும் அந்த அணியுடன் இணையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் பிரபல பயிற்றுவிப்பாளர்களில் ஒருவரான க்ரிஸ் ரோஜர்ஸ் மற்றும் மேற்கிந்திய தீவுகளின் உதவி பயிற்றுவிப்பாளர் டொபி ரெட்போட் ஆகியோர் இந்த பதவிக்கு விண்ணப்பித்திருந்த போதிலும், சந்திக ஹதுருசிங்கவுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.