ரக்பி உலகக் கிண்ணம்- இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தெரிவு

rugby world cup
rugby world cup

ரக்பி உலகக் கிண்ணம் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் காலிறுதிப் போட்டிகளில் வெற்றி பெற்ற இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

ஜப்பானில் 9வது உலகக் கிண்ண ரக்பி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஆசியாவில் உலகக் கிண்ண ரக்பி போட்டிகள் நடப்பது இதுவே முதல் முறையாகும்.

ரக்பி உலகக் கிண்ண போட்டிகள் செப்டெம்பர் மாதம் 2ம் திகதி ஆரம்பித்திருந்த நிலையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 2ம் திகதி நிறைவடையவுள்ளது.

இன்று நடைபெற்ற முதலாவது காலிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி அவுஸ்ரேலிய அணியை 40-16 எனும் புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இரண்டாவது காலிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி அயர்லாந்து அணியை 46-14 எனும் புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தி எதிர்வருகின்ற ஒக்டோபர் 27ம் திகதி நடைபெறவுள்ள அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை சந்திக்கிறது.

இதேவேளை நாளை நடைபெறுகின்ற காலிறுதி ஆட்டங்களில் வேல்ஸ்-பிரான்ஸ் அணியையும், ஜப்பான்-தென்னாபிரிக்க அணியையும் சந்திக்கிறது. இவ்விரு ஆட்டங்களிலும் வெற்றி பெறும் அணி அரையிறுதியில் சந்திக்கும்.

இறுதிப்போட்டி நவம்பர் 2ம் திகதி நடைபெறவுள்ள அதேவேளை 3ம் இடத்திற்கான போட்டி நவம்பர் 1ம் திகதி நடைபெறவுள்ளது.

இதுவரை ரக்பி உலகக் கிண்ணத்தினை நியூசிலாந்து 3 தடவைகளும் (1987,2011,2015), தென்னாபிரிக்கா 2 தடவைகளும் (1995,2007), அவுஸ்ரேலியா 2 தடவைகளும் (1991,19999), இங்கிலாந்து 1 தடவையும்(2003) கைப்பற்றியுள்ளன.