இலங்கை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பிரட் லீ

Brett Lee
Brett Lee

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக அவுஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான பிரட் லீ நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை அணி அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு குறித்த தொடரை நிறைவு செய்ததன் பின்னர் குறித்த பயிற்சியாளர் நியமனம் இடம்பெறலாம்.

42 வயதான பிரட் லீ அவுஸ்திரேலிய அணிக்காக 76 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 310 விக்கெட்டுக்களையும் 221 ஒருநாள் போட்டிகளில் கலந்துகொண்டு 380 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியுள்ளார். தற்போது இவர் கிரிக்கட் வர்ணனையாளராக கடமையாற்றி வருகின்றார்.

இலங்கை அணியின் தற்காலிக வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக இலங்கை அணியின் தற்காலிக பயிற்சியாளர் ருமேஸ் ரத்னாயக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.