வளர்ந்து வருவோருக்கான ஆசியக் கிண்ணம்- இலங்கை அணி அறிவிப்பு

Sri Lanka
Sri Lanka

பங்களாதேஷில் நடைபெறவுள்ள வளர்ந்து வரும் அணிகளுக்கு இடையிலான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான 15 பேர்கொண்ட இலங்கை அணியை இலங்கை கிரிக்கெட் சபை இன்று (Oct.21) அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ஆசியக் கிண்ணத் தொடரின் சம்பியன் கிண்ணத்தை இலங்கை அணி சுவீகரித்திருந்தது.

சரித் அசலங்க, இம்முறை மீண்டும் அணியின் தலைவராகவும் கமிந்து மெண்டிஸ் உப தலைவராகவும் செயற்படவுள்ளனர்.

வளர்ந்து வரும் அணிகளுக்கு இடையிலான ஆசியக் கிண்ணத் தொடரில் 8 அணிகளும் A, B என இரண்டு குழுக்களாக மோதவுள்ளது.

A குழுவில் இடம்பெற்றுள்ள இலங்கை அணி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஓமான் ஆகிய அணிகளை எதிர்கொள்ளவுள்ளது.

B குழுவில் இந்தியா, பங்களாதேஷ், ஹொங்கொங், ஐக்கிய அரபு இராச்சியம் இடம்பெற்றுள்ளன.

பங்களாதேஷில் எதிர்வரும் நவம்பர் 14ம் திகதி ஆரம்பமாகும் வளர்ந்துவரும் அணிகளுக்கு இடையிலான ஆசியக் கிண்ணத் தொடர் நவம்பர் 23ம் திகதிவரை நடைபெறவுள்ளது.

இலங்கை வளர்ந்துவரும் அணி விபரம்

சரித் அசலங்க (தலைவர்), கமிந்து மெண்டிஸ் (உப தலைவர்), பெதும் நிஸ்ஸங்க, ஹசித போயகொட, மினோத் பானுக, அஷேன் பண்டார, சம்மு அஷான், நிஷான் மதுசங்க, ஜெஹான் டேனியல், அசித பெர்னாண்டோ, கலன பெரேரா, ஷிரான் பெர்னாண்டோ, ரமேஷ் மெண்டிஸ், அமில அபோன்சோ சச்சிந்து கொலம்பகே

வளர்ந்து வரும் இலங்கை அணியின் போட்டி விபரம்

  1. இலங்கை அணி எதிர் ஓமான் அணி – நவம்பர் 14
  2. இலங்கை எதிர் பாகிஸ்தான் அணி – நவம்பர் 16
  3. இலங்கை அணி எதிர் ஆப்கானிஸ்தான் அணி – நவம்பர் 18