இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பேயர்ன் மூனிச்

football54 1586242619
football54 1586242619

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் பேயர்ன் மூனிச், லயன் கிளப்பை தோற்கடித்து 11 வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

கழக அணிகளுக்கு இடையிலான ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி போர்த்துக்கல் தலைநகர் லிஸ்பனில் நடைபெற்று வருகிறது.

இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த அரையிறுதிப் போட்டியில் 5 முறை சம்பியனான பேயர்ன் மூனிச் (ஜேர்மனி) அணி 3-0 என்ற கோல் கணக்கில் லயன் அணியை (பிரான்ஸ்) தோற்கடித்து 11 ஆவது தடவையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

பேயர்ன் மூனிச் அணியில் செர்ஜ் ஞாப்ரி 18 ஆவது மற்றும் 33 ஆவது நிமிடங்களிலும் ரொபர்ட் லெவன்டவ்ஸ்கி 88 ஆவது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.

முதல் 15 நிமிடங்கள் எதிரணியின் கோல் கம்பத்தை அடிக்கடி முற்றுகையிட்ட லயன் வீரர்கள், அதன் பிறகு பேயர்ன் மூனிச் அணியின் ஆக்ரோஷத்துக்கு பணிந்து விட்டனர். கடைசியாக விளையாடிய 29 போட்டிகளில் பேயர்ன் மூனிச் தோல்வியை சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் பேயர்ன் மூனிச் அணி, பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (பிரான்ஸ்) அணியை எதிர்கொள்கிறது.