அவுஸ்திரேலியா அணி இங்கிலாந்துக்கு புறப்பட்டது

625.0.560.350.160.300.053.800.668.160.90 3
625.0.560.350.160.300.053.800.668.160.90 3

இங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள 3 ஒருநாள் மற்றும் 3 இருபதுக்கு 20 போட்டிகளில் பங்கேற்பதற்காக அவுஸ்திரேலிய அணி நேற்று இங்கிலாந்துக்கு புறப்பட்டது.

ஏற்கனவே இங்கிலாந்துக்கு மேற்கிந்திய தீவுகள், அயர்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் சென்று விளையாடிவரும் நிலையில் தற்போது அவுஸ்திரேலிய அணியும் இவ்வாறு புறப்பட்டுள்ளது.

இந்த தொடர் நிறைவடைந்தவுடன் அவுஸ்திரேலியாவின் 12 வீரர்களும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெறவுள்ள ஐ.பி.எல் தொடரில் பங்கேற்கவுள்ளனர்.

கொரோனா ஏற்பட்டு சர்வதேச ரீதியில் அனைத்து வகையான சர்வதேச கிரிக்கட் போட்டிகளும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்த கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.