தோனியை இந்திய கிரிக்கெட் சபை சரியான பாதையில் வழிநடத்தவில்லை-சக்லைன் முஷ்டாக்

202006161559302908 Tamil News No bowler better than ashwin in home conditions SECVPF
202006161559302908 Tamil News No bowler better than ashwin in home conditions SECVPF

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை சரியான பாதையில் வழிநடத்தவில்லை என பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சக்லைன் முஷ்டாக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியபோது,

அவர் போட்டியில் இருந்து விடைபெற்ற சந்தர்ப்பத்தில் எந்தவொரு பிரியாவிடை போட்டியிலும் விளையாடாமை வறுத்தமளிப்பதாகவும் இதனை அவரது ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஒவ்வொரு வீரரும் தமது அணிக்கான ஆடையில் இறுதி போட்டி விளையாட வேண்டுமென எதிர்பார்க்கின்ற நிலையில் மகேந்திர சிங் தோனிக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அதற்கான வாய்ப்பை வழங்கவில்லை எனவும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சக்லைன் முஷ்டாக் தெரிவித்துள்ளார்.