அவசியம் இருந்தா மட்டும் வெளியே போங்க-தமிழில் பேசிய ஹர்பஜன் சிங்

harbhajan singh jpg 710x400xt
harbhajan singh jpg 710x400xt

“வணக்கம் சென்னை. அவசியம் இருந்தா மட்டும் வெளியே போங்க.மறக்காம மாஸ்க் போடுங்க” என இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் தமிழில் பேசி காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் ஒத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் டி20 போட்டிகள் அமீரகத்தில் நடைபெற உள்ளது.

இதற்காக ஐபிஎல் அணிகள் ஏற்கனவே அரபு அமீரகம் சென்றடைந்துள்ளன. முன்னதாக அமீரகம் செல்வதற்கு முன்பாக தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சென்னையில் பயிற்சி மேற்கொண்டனர் .

இந்நிலையில் சிஎஸ்கே அணியின் சுழல்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தமிழில் பேசி காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த காணொளியானது தற்போது வைரலாகி வருகிறது.