வவுனியாவில் தேசிய முன்னணி அணிகளிற்கிடையே கூடைப்பந்தாட்டப் போட்டி

IMG 20200829 WA0025
IMG 20200829 WA0025

வவுனியா நகரசபை கூடைப்பந்தாட்டத்திடலில் நேற்று காலை தொடக்கம் மாலை வரை அணிக்கு மூன்று பேர் கொண்ட அணிகளுக்கிடையிலான கூடைப்பந்தாட்ட சுற்றுப் போட்டிகள் இடம்பெற்றது .

வவுனியா மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆண்கள் கலந்துகொள்ளும் 24 அணிகளுக்கிடையிலான சுற்றுப் போட்டிகள் இடம்பெற்றது .

யாழ்ப்பாணம் , கிளிநொச்சி , அனுராதபுரம் , வவுனியா திருகோணமலை , மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் கலந்துகொண்ட போட்டியில் தேசிய மட்டத்தின் முன்னணியிலிருக்கின்ற அணிகள் இப்போட்டியில் கலந்துகொண்டன.

இப்போட்டியில் முதலாம் இடத்தை அனுராதபுர மாவட்டத்தை சேர்ந்த keterians(A) என்ற அணியும் இரண்டாம் இடத்தை கிளிநொச்சி மாவட்டத்தை சேரந்த lights‌ அணியும் வெற்றி பெற்று பணப்பரிசை தமதாக்கி கொண்டுள்ளனர். 

இப்போட்டியில் தேசிய அணிகளின் பயிற்றுவிப்பாளர் அஜித் குறுஸ் மற்றும் குறிப்பிட்ட மாவட்டங்களை உள்ளடக்கிய நூற்றிற்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

IMG 20200829 WA0025 1 1
IMG 20200829 WA0027