கால்பந்து வீரர் நெய்மருக்கு கொரோனா!

1599108403 7644
1599108403 7644

பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் நெய்மருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இபிஸா தீவுக்கு நெய்மர் விடுமுறையை கொண்டாட சென்றதாகவும் அங்கு அவருக்கு கொரோனா தொற்றிக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் இவர் பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் லீக்-1 கால்பந்து தொடரின் முன்னணி அணியான பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்காக விளையாடி வருகிறார்.

அதில் நெய்மர், டி மரியா, லயாண்ட்ரோ பரேடஸ் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று பிஎஸ்ஜி அணி தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி பிஎஸ்ஜி அணி யூரோ சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தால் பிரெஞ்ச் லீக்கில் அவர்களுடைய 2-வது போட்டியை தள்ளி வைக்க கேட்டுக்கொண்டது.

இதற்கமைய இப்போட்டி ஒக்டோபர் 10-ந்திகதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.