முதலாவது இருபதிற்க்கு இருபது போட்டியில் இங்கிலாந்து வெற்றி!

4d6d10d244185a00888b85acda2dc6f1
4d6d10d244185a00888b85acda2dc6f1

இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதிற்க்கு இருபது போட்டியில் இங்கிலாந்து அணி 2 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதிற்க்கு இருபது போட்டி சவுத்தாம்ப்டன்மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட T20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்களை இழந்து 162 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

துடுப்பாட்டத்தில் இங்கிலாந்து அணிசார்பாகடேவிட் மாலன் 66 ஓட்டங்களையும் ஜோஸ் பட்லர் 44 ஓட்டங்கனை பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில்க்ளென் மேக்ஸ்வெல், ஆஷ்டன் அகர், கேன் ரிச்சர்ட்சன் ஆகியோர் தலா 2 விக்கட்களை கைப்பற்றினர்.

163 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்களை இழந்து 160 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

அவுஸ்திரேலிய அணிசார்பாக துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாகடேவிட் வார்னர் 58 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.