ஐ.பி.எல். ரி-20 லீக் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு!

IPL
IPL

நடப்பு ஆண்டு ஐ.பி.எல். ரி-20 லீக் தொடருக்கான போட்டி அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை வெளியிட்டுள்ளது.

இதன்படி, நடைபெறவுள்ள முதல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இரண்டாவது போட்டியில் டெல்லி கெபிட்டல்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன.

மூன்றாவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

10 நாட்களில் இரண்டு போட்டிகளில் நடைபெறுகின்றன. முதல் போட்டி 3.30 மணிக்கும், இரண்டாவது போட்டி 7.30 மணிக்கும் நடபெறுகிறது.

பிளே ஒஃப் சுற்றுகள் மற்றும் இறுதிப்போட்டி நடைபெறும் இடங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதிப் போட்டி நவம்பர் 10ஆம் திகதி நடைபெறவுள்ளது.

மொத்தம் 53 நாட்கள் நடைபெறும் இந்தப் போட்டி தொடர், இதுவரை நடைபெற்ற ஐ.பி.எல் தொடர்களிலேயே மிக நீண்ட தொடராகும் என்பதும் குறிப்பிடத்தக்கது .