நாம் அனைவரும் ஒரு கட்டத்தில் ஒதுங்க வேண்டும்-பிராவோ

1540503548 908139 1540503943 noticia normal
1540503548 908139 1540503943 noticia normal

நாம் அனைவரும் ஒரு கட்டத்தில் ஒதுங்க வேண்டும்.ஆனால் எப்போது என்பதுதான் விஷயம் உள்ளது என மேற்கிந்திய தீவுகள் அணியின் சகலதுறை வீரர் டுவைய்ன் பிராவோ தெரிவித்துள்ளார்.

டோனியுடன் சிறிது காலங்கள் உடன் இருப்பதால் அவரின் மனதில் இருப்பதை நான் அறிவேன்.டோனியை தவிர சென்னை அணியில் மற்றவர்களை கேப்டனாக ரசிகர்களால் நினைத்து கூட பார்க்க முடியாது.

ஐபிஎல் தொடர் துவங்கியதில் இருந்தே, சென்னை அணியின் தலைவராக டோனி நீடித்து வருகிறார். இரண்டு ஆண்டுகள் சென்னை அணி தடை செய்யப்பட்டு மீண்டும் போதும், டோனியே மீண்டும் கேப்டனாக பொறுப்பேற்றார்.

இதன் மூலம் ஐ.பி.எல் வரலாற்றில் ஒரு அணிக்கு ஒருவரே கேப்டனாக நீடிப்பது டோனி மட்டுமே, டோனி தலைமையிலான சென்னை அணி மூன்று கோப்பையை வென்றுள்ளது என தெரிவித்துள்ளார்.