சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற தயாராகும் பிரபல வீரர்!

pic
pic

இங்கிலாந்து கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் இயன் பெல் அனைத்துவிதமான போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதற்கு தீர்மானித்துள்ளார்.

தற்போது பருவகால விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றுள்ள அவர், அது நிறைவடைந்த பின்னர் ஓய்வு பெறபோவதாக தெரிவித்துள்ளார் 2015ம் ஆண்டு இயன் பெல் இறுதியாக இங்கிலாந்து அணிக்காக விளையாடியிருந்தார்.

அதன் பின்னர் கழக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிவந்த இயன் பெல் காயம் காரணமாக 2019ம் ஆண்டு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதிலிருந்து விலகியிருந்தார்.

கொவிட் – 19 தொற்று பரவலினால் இவ்வருடம் இடம்பெற்ற கிரிக்கெட் போட்டிகளிலும் அவர் பங்கேற்கவில்லை. கடந்த 22 வருடகாலமாக இங்கிலாந்து கிரிக்கெட் அணி மற்றும் கழக மட்ட போட்டிகளில் விளையாடுவதில் அதிக ஆர்வத்தை கொண்டிருந்த இயன்பெல் அனைத்துவிதமான போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெற தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.