செரீனா வில்லியம்ஸ் கால் இறுதி சுற்றுக்கு தகுதி

140657
140657

நியூயோர்க்கில் நடைபெற்று வரும் அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டியில் செரீனா வில்லியம்ஸ் கால் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க பகிரங்க் டென்னிஸ் போட்டி நியூயோர்க்கில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் 3ஆம் நிலை வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் 4-வது சுற்றில் கிரீஸ் நாட்டைச் சேர்ந்த மரியா ‌ஷகாரியை எதிர்கொண்டார்.

இதில் செரீனா முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

2-வது செட்டில் ஷகாரி 8-6 என்ற கணக்கில் வென்றார்.

இதனையடுத்து வெற்றி-தோல்வியை நிர்ணயிக்கும் 3 வது மற்றும் இறுதி செட்டில் செரீனா வில்லியம்ஸ் சிறப்பாக ஆடி 6-3 என்ற கணக்கில் வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றமை குறிப்பிடத்தக்கது.