உலகின் முதல்நிலை வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி விலகல்

Ashleigh Barty 1
Ashleigh Barty 1

உலகின் முதல்நிலை டென்னிஸ் வீராங்கனையான அவுஸ்ரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி கொரோனா அச்சத்தால் அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டியில் பங்கேற்பதை தவிர்த்தார்.

இந்த நிலையில் வருகிற 27-ந் திகதி பாரீஸ் நகரில் தொடங்கும் ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் போட்டியில் இருந்தும் கொரோனா பயத்தால் ஆஷ்லி பார்ட்டி விலகியிருக்கிறார்.24 வயதான ஆஷ்லி கடந்த ஆண்டு ரோலண்ட் கரோஸில் நடந்த போட்டியில் மார்க்கெட்டா வொண்ட்ரூசோவாவை தோற்கடித்து கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.