கரீபியன் பிரீமியர் லீக் T20 தொடரின் இறுதிப்போட்டி இன்று!

i
i

8ஆவது கரீபியன் பிரீமியர் லீக் இருபதுக்கு 20 தொடரின் இறுதிப்போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

இந்த இறுதிப் போட்டியில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ்மற்றும் செயின்ட் லூசியா ஸோக்ஸ்அணிகள் மோதவுள்ளன.

டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு தெரிவாகியிருந்த நிலையில், நேற்றைய இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம்செயின்ட் லூசியா ஸோக்ஸ்அணி இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

இதேவேளை, செயின்ட் லூசியா ஸோக்ஸ்அணி இதுவரை கரீபியன் பிரீமியர் லீக் கிண்ணத்தை வெற்றிபெறவில்லை என்பதுடன், டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிஇரண்டு தடவை கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.