விளையாட்டு போட்டிகளை பார்வையிட ரசிகர்களுக்கு அனுமதி

images 2
images 2

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் விளையாட்டு போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என இங்கிலாந்து பிரதமர் பொரிஸ் ஜொன்சன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள நிலையில், தற்போது அது தளர்த்தப்பட்டுவருவதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கமைய, எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் அதிகளவான ரசிகர்கள் மைதானங்களுக்கு அனுமதிக்கப்படுவர்.

எனினும், சுகாதார வழிகாட்டுதல்கள் தொடர்ந்தும் பின்பற்றப்படும் எனவும் இங்கிலாந்து பிரதமர் பொரிஸ் ஜொன்சன் குறிப்பிட்டுள்ளார்.