அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு ஆறுதல் வெற்றி

n 1
n 1

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரை 2 க்கு 1 என்ற அடிப்படையில் இங்கிலாந்து அணி கைப்பற்றியுள்ளது.

3 இருபதுக்கு 20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் சுற்றுத் தொடருக்காக அவுஸ்திரேலிய அணி, இங்கிலாந்துக்குப் பயணமாகியுள்ளது.

இந்த நிலையில், இந்த இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டிகடந்த புதன்கிழமை இடம்பெற்றது.

இந்த போட்டியில் அவுஸ்திரேலிய அணி, 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

இதனை அடுத்து, 2 க்கு 1 என்ற அடிப்படையில் இங்கிலாந்து அணி கைப்பற்றியுள்ளது.

இந்த நிலையில், ஆட்ட நாயகனாக மிட்செல் மார்ஷ் மற்றும் தொடர் நாயகனாக ஜோஸ் புட்டலர் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.