இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மரணம்

SSSS
SSSS

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டொனி ஒபாத, தனது 73 ஆவது வயதில் காலமாகியுள்ளார்.

வலது கை நடுத்தர வேகப்பந்து வீச்சாளரான ஒபாத, கொழும்பின் செயின்ட் பீட்டர்ஸ் கல்லூரியில் கல்வி பயின்றார் மற்றும் 1968 இல் ரோயல் சிலோன் தன்னார்வ விமானப் படையில் சேர்ந்தார்.

1971 ஆம் ஆண்டில் இலங்கை சர்வதேச கிரிக்கெட் அணிக்காக முதன்முதலில் விளையாடிய இவர், 1975 மற்றும் 1979 ஆம் ஆண்டுகளில் இங்கிலாந்தில் நடந்த உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியில் இடம்பிடித்திருந்தார்.

ஐந்து ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள ஒபாத, 180 ஓட்டங்களையும் ஐந்து விக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.