சூடுபிடிக்கும் லங்கா பிரீமியர் லீக் இருபதுக்கு – 20 தொடர்!

sri lanka
sri lanka

லங்கா பிரீமியர் லீக் இருபதுக்கு – 20 தொடரானது எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இப் போட்டிகள் அனைத்தும் அம்பாந்தோட்டை, பலலேகல மற்றும் தம்புளையில் நடைபெறவுள்ளது.

தொடரில் கலந்து கொள்ளும் ஐந்து அணிகளுக்கும் நாட்டின் ஐந்து முக்கிய நகரங்களை பிரதிபலிக்கின்றன. அதன்படி கொழும்பு, காலி, யாழ்ப்பாண், தம்புளை மற்றும் கண்டி ஆகியவை அடங்கும்.

ஒவ்வொரு அணியிலும் ஆறு வெளிநாட்டு வீரர்கள் உள்ளடக்கப்படுவார்கள். அது தவிர ஒவ்வொரு அணியிலும் இலங்கை கிரிக்கெட் அணியின் பிரதான வீரர்களும் உள்ளடக்கப்படவுள்ளனர்.

அதன்படி லசித் மலிங்க, அஞ்சலோ மெத்தியூஸ், திஸார பெரேரா, தசூன் சானக்க மற்றும் குசல் ஜனித் பெரேரா ஆகிய ஐந்து பிரதான வீரர்களும் ஐந்து அணிகளிலும் உள்ளடக்கப்படவுள்ளனர்.