சர்வதேச கிரிக்கெட் பேரவையின் அதிரடி தீர்மானம் கிரிக்கெட் வீரர்கள் மூவர் இடைநிறுத்தம்!

icc 1
icc 1

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்பு விதிமுறைகளை மீறியமைக்காக ஐக்கிய அரபு இராச்சியத்தின் கிரிக்கெட் வீரர்களான அமீர் ஹயாத் மற்றும்அஷுபாக் அஹ்மத் ஆகியோர் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் மூலம் இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், குறித்த இருவரும் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த இருவரும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்பு விதிமுறைகளின் 5 பிரிவுகளின் மூலம் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க இருவருக்கும் 2 வாரகால அவகாசம், சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 2019ஆம் ஆண்டின் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தகுதிகாண் தொடரின்போது, அஷுபாக் அஹ்மத் ஐ ஐக்கிய அரபு இராச்சிய கிரிக்கெட் சபை இடைநிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.