முடிவுக்கு வருகிறது தடை மீண்டும் மிரட்டவருகிறார் ஸ்ரீசாந்த்..!…

jpg 710x400xt
jpg 710x400xt

இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் முறைகேட்டில் ஈடுபட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கமைய விசாரணை நடத்திய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை, ஸ்ரீசாந்த் உள்ளிட்ட மேலும் இரு வீரர்களுக்கு ஆயுள்கால போட்டித் தடை விதித்தது.

இந்தத் தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஸ்ரீசாந்த் வழக்குத் தொடர்ந்தார்.

இதற்கமைய, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையினால் விதிக்கப்பட்ட தடையை நிராகரித்த உச்சநீதிமன்றம், ஸ்ரீசாந்தின் தண்டனைக் காலம் குறித்து நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை ஸ்ரீசாந்துக்கு ஏழு வருடங்கள் போட்டிகளில் பங்கேற்பதற்கு தடை விதித்தது.

இந்த நிலையில், குறித்த தண்டனைக்காலம் கடந்த 13 ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ள நிலையில், ஸ்ரீசாந்த் மீண்டும் போட்டிகளில் பங்கேற்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.