இரண்டாவது T20I இலிருந்து மிச்செல் ஸ்டார்க் விலகல்

starc
starc

இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான T20I தொடரின் இரண்டாவது போட்டியில் இருந்து அவுஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளரான மிச்செல் ஸ்டார்க் விலகியுள்ளார்.

அவரது சகோதரர் திருமணத்தில் கலந்து கொள்ள இருப்பதால் இந்த போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

இதனால் காப்பா நகரில் எதிர்வரும் புதன்கிழமை(Oct.30) நடைபெறவுள்ள இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான T20I தொடரின் இரண்டாவது போட்டியில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி பில்லி ஸ்டேன்லேக் அல்லது சீன் அப்போட் ஆகிய இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, நேற்றுமுன்தினம் நடைபெற்ற முதல் போட்டியில் அவுஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்று மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலையில்
காணப்படுகின்றது.