ரசிகர்களுக்கு அனுமதி வழங்கியதற்கு ரபேல் நடால் எதிர்ப்பு!

rafael nadal 720x450 1
rafael nadal 720x450 1

பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் தொடரில் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கியதற்கு பிரபல டெனிஸ் வீரர் ரபேல் நடால் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.

கடந்த மே மாதம் நடைபெறவிருந்த பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் தொடர் கொவிட் 19 பரவல் காரணமாக பிற்போடப்பட்டிருந்தது.

இதற்கமை எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் குறித்த தொடர் ஆரம்பமாகவுள்ளது.

அதேநேரம் பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் தொடரில் பார்வையாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனினும் அந்த நடவடிக்கைக்கு ரபேல் நடால் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.

கொவிட் 19 தொற்று பரவலுக்கு மத்தியில் பார்வையாளர்களை அனுமதிப்பது பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

நடைபெற்று முடிந்த அமெரிக்க பகிரங்க டெனிஸ் தொடர் பார்வையாளர்கள் இன்றி இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.