கங்காருக்களிடம் மண்டியிட்டது இங்கிலாந்து !

AUS vs WI 10th match of icc world cup 2019 2
AUS vs WI 10th match of icc world cup 2019 2

மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில்இங்கிலாந்து அணியை வீழ்த்தி அவுஸ்ரேலியா அணி 3 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

மன்செஸ்டர்- ஓல்ட்ரப்போர்ட் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 302 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, ஜோனி பேயர்ஸ்டொவ் 112 ஓட்டங்களையும், சேம் பிளிங்ஸ் 57 ஓட்டங்களையும், கிறிஸ் வோக்ஸ் 53 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

அவுஸ்ரேலிய அணியின் பந்துவீச்சில் மிட்செல் ஸ்டாக் மற்றும் ஆடம் செம்பா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், பெட் கம்மின்ஸ் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 303 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய அவுஸ்ரேலியா அணி, 49.4 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் அவுஸ்ரேலியா அணி 3 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இதன்போது அவுஸ்ரேலியா அணி சார்பில், அதிகபட்ச ஓட்டங்களாக கிளென் மேக்ஸ்வெல் 108 ஓட்டங்களையும், அலெக்ஸ் கெரி 106 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில், கிறிஸ் வோக்ஸ் மற்றும் ஜோ ரூட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் ஜொப்ரா ஆர்செர் மற்றும் அடில் ராஷித் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாகவும், தொடரின் நாயகனாகவும் அவுஸ்ரேலிய அணியின் கிளென் மேக்ஸ்வெல் தெரிவுசெய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை அவுஸ்ரேலியா அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளமைக்குறிப்பிடத்தது.