சாகல் அபார பந்துவீச்சு சுருண்டது ஹைதராபாத்

RON 2032 1
RON 2032 1

சாகலின் அபார பந்து வீச்சால் ஹைதராபாத் அணி 153 ஓட்டங்களுடன் சுருண்டது. இதனால், 10 ஓட்டங்களால் வெற்றியைத் தனதாக்கியது பெங்களூர் றோயல் சலஞ்சர்ஸ்.

DSC 1485
DSC 1485

13 ஆவது ஐ.பி.எல். தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடக்கிறது. இதில் டுபாயில் நடந்த நேற்றைய போட்டியில் பெங்களூர் றோயல் சலஞ்சர்ஸ் அணியும் ஹைதராபாத் சன்ரைஸர்ஸ் அணியும் மோதின.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஹைதராபாத்தின் கப்டன் வோர்ணர் முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தார்.

RON 2032
RON 2032

இதனால் கோலியின் பெங்களூர் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. தேவ்தத் படிக்கல் – அரோன் பின்ஞ் இணை தொடக்கம் கொடுத்தது. படிக்கல்லின் அபாராமான ஆட்டத்தால் பெங்களூரின் ஓட்டம் சீரான வேகத்தில் உயர்ந்தது.

அரைச்சதம் கடந்த படிக்கல் 10 ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவர் 8 பௌண்டரிகளுடன் 56 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

AI 1772
AI 1772

கோலி களமிறங்கவே, அடுத்த பந்திலேயே மறுமுனையில் ஆடிய பின்ஞ் 2 சிக்ஸர்களுடன் 29 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

ஏமாற்றிய கோலி

கோலியுடன் இணை சேர்ந்தார் ஏபி டி வில்லியர்ஸ். இருவரும் இணைந்து அதிரடி காட்டுவர் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது. ஆனால், அந்த எதிர்பார்ப்பை ஏமாற்றினார் கோலி. நடராஜனின் பந்தை அடித்தாட முயன்று ரஷீத் கானிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

200 சிக்ஸர்

ஆனால், ஏபி டி வில்லியர்ஸ் அபாராமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 2011 ஆம் ஆண்டு முதல் பெங்களூர் அணிக்காக விளையாடும் அவர், 30 பந்துகளில் 4 பௌண்டரிகள், 2 சிக்ஸர்கள் அடங்கலாக 51 ஓட்டங்களைக் குவித்தார். இரண்டாவது சிக்ஸரை அடித்தபோது வில்லியர்ஸ் பெங்களூர் அணிக்காக 200 சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

DQ0Q1939
DQ0Q1939

20 ஓவர்கள் நிறைவில் பெங்களூர் அணி 5 விக்கெட்களை இழந்து 163 ஓட்டங்களைப் பெற்றது.

ஹைதராபாத்தின் பந்துவீச்சில், நடராஜன், சங்கர், அபிஷேக் சர்மா ஆகியோர் ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

164 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கைத் துரத்த ஆரம்பித்த ஹைதராபாத் அணிக்கு அதன் தலைவர் வோர்ணரும், பெயர்ஸ்ரோவும் ஆரம்ப வீரர்களாகக் களமிறங்கினர்.

பெயர்ஸ்ரோ அபாரம்

வோர்ணர் 6 ஓட்டங்களுடன் பெவிலியன் திரும்ப, மனிஷ் பண்டே களமிறங்கினார். இருவரும் சிறப்பான இணைப்பாட்டத்தை ஏற்படுத்தினர். எனினும் அணி 89 ஓட்டங்களைப் பெற்ற போது, பண்டே 34 ஓட்டங்களுடன்ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து 6 பௌண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 61 ஓட்டங்களைப் பெற்றிருந்த பெயர்ஸ்ரோ ஆட்டமிழந்தார்.

அவருக்குப் பிறகு களமிறங்கிய வீரர்களில் கார்க் (12 ஓட்டங்கள்) தவிர, வேறு எவரும் இரு இலக்கத்தைத் தொடவில்லை. இந்நிலையில், 19.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்த ஹைதராபாத் அணி 153 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

RON 2037
RON 2037

பெங்களூர் அணியின் சார்பில் பந்துவீசிய சாகல் 3, டப், சய்னி ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகனாக 3 விக்கெட்களை கைப்பற்றிய சாகல் தெரிவானார்.