பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு பங்களாதேஷ் சம்மதம்

bang vs ind
bang vs ind

பங்களாதேஷ் கிரிக்கட் அணி இந்தியாவுடன் பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளது.

தற்போது பி.சி.சி.ஐ இன் தலைவராக பதவி ஏற்றுள்ள கங்குலி, இந்திய அணி கேப்டன் விராட் கோலியுடன் பகல்-இரவு டெஸ்ட் குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாட விராட் கோலி சம்மதம் தெரிவித்ததாக கங்குலி கூறியிருந்தார்.

இதனால் உடனடியாக வங்காளதேசத்திற்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்டனில் நடைபெற இருக்கும் 2வது டெஸ்ட் போட்டியை பகல்-இரவு டெஸ்டாக நடத்த இருக்கிறோம். நீங்கள் இந்த டெஸ்டில் விளையாட வேண்டும் என பங்களாதேஷ் கிரிக்கெட் சபைக்கு கடிதம் எழுதியிருந்தார்.

உறுதியாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை இதற்கு சம்மதம் தெரிவிக்கும் என கங்குலி நம்பிக்கை தெரிவித்திருந்தார். இதற்கிடையில் வீரர்கள் மற்றும் அணி நிருவாகத்துடன் ஆலோசனை நடத்திய பின்னர் முடிவை அறிவிக்கி்றோம் என்று பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தெரிவித்திருந்தது.

இந்நிலையில் நேற்றுறு மாலை பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாட பங்களாதேஷ் சம்மதம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் இந்திய டெஸ்ட் அணி முதன்முறையாக பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறது