பாக். பந்துவீச்சாளர்களுக்கு அக்தர் ஆலோசணை

akthar
akthar

பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது.

பாகிஸ்தான் அணியில் 19 வயதிற்குட்பட்ட மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் இடம் பிடித்துள்ளனர்.

இந்நிலையில் அவுஸ்திரேலியா மண்ணில் நாம் அபாயகரமான பந்து வீச்சாளர்கள் என்பதை பாகிஸ்தான் இளம் வீரர்கள் அசத்தலான பந்து வீச்சால் தெரியப்படுத்த வேண்டும் என அக்தர் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சோயிப் அக்தர் கூறுகையில்

‘‘பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர்களை ‘Back Foot’ சென்று விளையாட வைக்க விரும்பினால், அவர்களின் தலை மற்றும் கழுத்தை குறிவைக்க வேண்டும். இந்த நோக்கம் மிகமிக முக்கியமானது. ஓவருக்கு இரண்டு பந்துகளை துடுப்பாட்ட வீரரின் கழுத்து மற்றும் தலையின் பக்கவாட்டை தாக்க வேண்டும்.

அணித்தலைவர் பந்து வீச்சாளர்களை விக்கெட்டுக்கள் மட்டுமே வீழ்த்தும் நோக்கத்தில் பந்து வீசும்படி கொண்டு செல்லக்கூடாது. பாதுகாப்பான அணித்தலைவரை நான் விரும்பியதில்லை. பந்து வீச்சாளர்கள் பந்து வீச வரும்போது, அணித்தலைவர் கட்டாயம் தாக்கும் நோக்கத்தில் இருக்க வேண்டும்’’ என்றார்.