கொல்கத்தாவிடம் மண்டியிட்டது சன்ரைஸஸ் அணி!

1428553448 7838
1428553448 7838

நடப்பு ஆண்டுக்குரிய ஐ.பி.எல். ரி-20 தொடரின் 8ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி ஏழு இலக்குகளால் அபர வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் சன்ரைஸஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் ஷேக் சயீத் மைதானத்தில் பலப்பரிட்சை நடத்தியிருந்தன.

போட்டியில் நனைய சுழற்சியில் வெற்றிபெற்ற சன்ரைஸஸ் ஹைதராபாத் அணி முதலில் துடுப்பெடுத்தடி தமக்கு வழங்கப்பட இருப்பது பந்து பரிமாற்றங்களில் 4 இலக்குகளை இழந்து 142 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

ஹைதராபாத் அணியின் சார்பில் துடுப்பட்டத்தில் மனிஷ் பாண்டே51 ஓட்டங்களையும் அணித்தலைவர் டேவிட்வோனர் 36 ஓட்டங்களையும் விருத்திமான் சஹா 30 ஓட்டங்களையும் அதிக படியாக பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி சார்பில் ஆண்ட்ரே ரஸ்ஸல்,பாட் கம்மின்ஸ்,வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

143 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி போட்டியின் 18வது பந்து பரிமாற்ற நிறைவில் 3 இலக்குகளை இழந்து வெற்றி இலக்கை கடந்தது.

அணி சார்பில்துடுப்பாட்டத்தில் சுப்மான் கில்70 ஓட்டங்களையும், Eoin மோர்கன் 42ஓட்டங்களையும், நிதீஷ் ராணா 26ஓட்டங்களையும் பெற்று கொடுத்தனர்.

பந்து வீச்சில் ஹைதராபாத் அணியின் சார்பில் ரஷீத் கான்,தங்கராசு நடராஜன்,கலீல் அகமது ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி ஐந்தாம் இடத்துக்கு முன்னேறியுள்ள நிலையில் ஹைதராபாத் அணி எட்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது இந்த போட்டியின் ஆட்ட நாயகன் விருதினை சுப்மான் கில் தட்டிச்சென்றார்.