டெல்லியை வீழ்த்தியது சன்ரைசர்சஸ் அணி!

11 7
11 7

சன்ரைசர்சஸ் ஐதராபாத் மற்றும் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிகளுக்கிடையேயான இந்தியன் ப்ரியமிர் லீக் கிரிக்கட் போட்டியில் சன்ரைசர்சஸ் ஐதராபாத் அணி 15 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய சன்ரைசர்சஸ் ஐதராபாத் அணி நிர்ணியிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து 162 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பாக ஜொனி பெய்ஸ்ரோ 53 ஓட்டங்களை பெற்று கொடுத்தார்.

பதிலுக்கு துடுப்பாடிய டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 147 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது.

பந்து வீச்சில் சன்ரைசர்சஸ் ஐதராபாத் அணி சார்பாக ரசீட் கான் 3 விக்கட்டுக்களை கைப்பற்றியிருந்தார் .