ஐ.பி எல் அணிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை !

download 2 1
download 2 1

கொவிட் 19 தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகளை மீறும் அணிகளுக்கு 1 கோடி ரூபா அபராதம் விதிக்கப்படுமென இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

13ஆவது இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் அச்சம் காரணமாக மைதானத்துக்குள் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

அத்துடன், வீரர்கள், பயிற்சியாளர் மற்றும் உதவியாளர்களுக்கு 5 நாட்களுக்கு ஒரு முறை கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது.

இந்த நிலையில், கொரோனா தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகளை மீறி செயற்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென இந்திய கிரிக்கெட் கட்டுபபிரீமியர் லீக்கின் 8 அணிகளின் நிர்வாகங்களுக்கு மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.

இதற்கமைய, பாதுகாப்பு வளையத்தில் உள்ள வீரர்கள் அல்லது உதவியாளர்களுடன் வேறு ஒருவர் பேசுவதற்கு அணி நிர்வாகம் அனுமதி அளித்தால் 1 கோடி ரூபா அபராதம் விதிக்கப்படுமென தெரிவித்துள்ளது.