மும்பாய் இந்தியன்ஸ் அணி வெற்றி

IPL 5 850x460 acf cropped
IPL 5 850x460 acf cropped

மும்பாய் இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கிடையே நேற்று இடம்பெற்ற இந்தியன் ப்ரிமியர் லீக் கிரிக்கட் போட்டியில் மும்பாய் இந்தியன்ஸ் அணி 57 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய மும்பாய் இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து 194 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் மும்பாய் இந்தியன்ஸ் அணி சார்பாக சூரியகுமார் யாதவ் ஆட்டமிழக்காது 79 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

பதிலுக்கு துடுப்பாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 18.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 136 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

துடுப்பாட்டத்தில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி சார்பாக ஜோஸ் பட்லர் 70 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

பந்து வீச்சில் மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக ஜஸ்பிரிட் பும்ரா 4 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.