கொல்கத்தாவின்பந்துவீச்சில் ஆட்டம் கண்ட சென்னைஅணி !

kolkata knight riders 1602085072
kolkata knight riders 1602085072

நடப்பு ஆண்டுக்கான IPL தொடரின் 21 ஆவது போட்டியில் Kolkata Knight Riders அணி 10 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

இந்தப் போட்டியில், Chennai Super Kings மற்றும் Kolkata Knight Riders ஆகிய அணிகள் நேற்றைய தினம் பலப்பரீட்சை நடத்தின.

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் அபுதாபி சர்வதேச கிரிகெட் விளையாட்டரங்கில் இடம்பெற்ற இந்தப் போட்டியில், Kolkata Knight Riders அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய Kolkata Knight Riders அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 167 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இதனையடுத்து, பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய Chennai Super Kings அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 157 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டு தோல்வியைத் தழுவியது.

போட்டியின் சிறந்த வீரராக, 81 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்த Kolkata Knight Riders அணியின் Rahul Tripathi தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அத்தோடு இந்து போட்டிகளில் விளையாடியுள்ள Kolkata Knight Riders அணியானது மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதோடு இரண்டு போட்டிகளில் தோல்வியையும் சந்தித்து ஆறு புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளதோடு சென்னை அணியானது ஆறு போட்டிகளில் விளையாடி வெறும் இரண்டு போட்டிகளில் மாத்திரம் வெற்றி பெற்று தொடரில் ஐந்தாம் இடத்தில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது .