இந்திய அணி அதிர்ச்சித் தோல்வி

mushfiqur rahim
mushfiqur rahim

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணி 3போட்டிகள் கொண்ட T20I தொடரில் பங்குபற்றுகிறது. நேற்று நடைபெற்ற முதலாவது போட்டியில் இந்திய அணி அதிர்ச்சித் தோல்வியடைந்துள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 148 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 42 ஓட்டங்களையும், ரிஷாப் பன்ட் 27 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 19.3 ஓவர்களில் 2 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து 8 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பங்களாதேஷ் அணி சார்பில் அதிகபட்சமாக முஸ்பிகுர் ரஹிம் இறுதிவரை ஆட்டமிழக்காது 60 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

ஆட்டநாயகனாக முஸ்பிகுர் ரஹிம் தெரிவு செய்யப்பட்டார்.

3 போட்டிகள் கொண்ட இத்தொடரில் பங்களாதேஷ் அணி 1-0 என தொடரில் முன்னிலை பெற்றுள்ளது..

அடுத்த போட்டி 7ம் திகதி வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.