கழக மட்ட கிரிக்கெட் போட்டிகள் ஒத்தி வைப்பு !

கிரிக்கெட்
கிரிக்கெட்

23 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கழக மட்ட கிரிக்கெட் போட்டி மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை (07) நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த கழக மட்ட அரையிறுதிப் போட்டிகளே இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

நாட்டில் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.