ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 184 ஓட்டங்களை குவித்துள்ள டெல்லி அணி!

9S6A5625
9S6A5625

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 184 ஓட்டங்களை குவித்துள்ளது.

13 ஆவது ஐ.பி.எல். தொடரின் 23 ஆட்டம் இன்றைய தினம் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ரோயல் மற்றும் ஸ்ரேயஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிகளுக்கிடையே ஆரம்பமானது.

சார்ஜாவில் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி களத்தடுப்பை தேர்வு செய்ய முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு களமிறங்கிய டெல்லி அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 184 ஓட்டங்களை குவித்தது.

டெல்லி அணி சார்பில் பிரித்வி ஷா 19 ஓட்டங்களையும், தவான் 5 ஓட்டங்களையும், ஸ்ரேயஸ் அய்யர் 22 ஓட்டங்களையும், ரிஷாத் பந்த் 5 ஓட்டங்களையும், மார்க்கஸ் ஸ்டோனிஸ் 39 ஓட்டங்களையும், சிம்ரன் ஹெட்மேயர் 45 ஓட்டங்களையும், அக்ஸர் படேல் 17 ஓட்டங்களயைும், ஹர்ஷல் படேல் 16 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்க ரபடா 2 ஓட்டங்களுடனும், அஷ்வின் எதுவித ஓட்டமின்றியும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்து வீச்சில் ராஜஸ்தான் அணி சார்பில் ஜேப்ர ஆர்ச்சர் 3 விக்கெட்டுக்களையும், கார்த்திக் தியாகி, ராகுல் திவதியா மற்றும் ஆண்ட்ரூ டை ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.