மகளிர் இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இன்று இரண்டு போட்டிகள்

india women cricket2 1551173072
india women cricket2 1551173072

ஐக்கிய அரபு இராச்சியத்தில் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள மகளிர் இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய வீராங்கனைகள், எதிர்வரும் 13 ஆம் திகதிக்கு முன்னர் மும்பையில் ஒன்று கூடுமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொடரில் பங்கேற்கவுள்ள அணிகளின் விபரங்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை இதுவரையில் அறிவிக்கவில்லை.

எனினும், தொடரில் பங்கேற்கவுள்ள வீராங்கனைகள் தொடர்பான தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அவர்கள் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்பட்டு, கொவிட்-19 பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து எதிர்வரும் 22 ஆம் திகதி வீராங்கனைகள் ஐக்கிய அரபு ராச்சியத்திற்கு பயணிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன் நடைபெற்று வரும் இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.