பெங்களூரு- கொல்கத்தா அணிகள் இன்று மோதல்

D3ZbcRSUEAEsEZX
D3ZbcRSUEAEsEZX

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று(12) இடம்பெறவுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான இந்த போட்டி ஷார்ஜாவில் இலங்கை நேரப்படி இன்றிரவு 7.30 அளவில் ஆரம்பமாகவுள்ளது.

இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இதுவரையில் 6 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் தரப்படுத்தலில் மூன்றாம் இடத்திலுள்ளது.

அத்துடன் இதுவரையில் 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 புள்ளிகளுடன் நான்காம் இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.