தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது சென்னை சூப்பர் கிங் அணி!

vikatan 2020 10 10f8854a 4f95 499a 9ac6 2cd7a8934a08 20201012 114256
vikatan 2020 10 10f8854a 4f95 499a 9ac6 2cd7a8934a08 20201012 114256

நடப்பு ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங் அணி 20 ஓட்டங்களால் ஆபர வெற்றி பெற்றுள்ளது.

டுபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற தொடரின் 29வது சென்னை சூப்பர் கிங்மற்றும் சன்ரைசஸ்ஹைதராபாத் அணிகள் பலப்பரிட்சை நடத்தியிருந்தன.

அந்த வகையில் போட்டியில் நனைய சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை அணியின் தலைவர் மகேந்திர சிங் டோனி முதலில் துடுப்பட்டத்தை தெரிவு செய்தார்.

அதன் அடிப்படையில் சென்னை அணி தனக்கு வழங்கப்பட்ட இருபது பந்து பரிமாற்றங்களில் 6 இலக்கினை இழந்து 167 ஓட்ட ங்களை பெற்றுக்கொண்டது.

அணிசார்பாக ஷேன் வாட்சன் 42 ஓட்டங்களையும் அம்பதி ராயுடு 41 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர் சன்ரைசஸ்ஹைதராபாத் அணி சார்பில் பந்து வீச்சில் சந்தீப் சர்மா,தங்கராசு நடராஜன்,கலீல் அகமது ஆகியோர் தலாஇரண்டு இலக்குகளை சாய்த்தனர்.

பதிலுக்கு 168 என்கின்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய சன்ரைசஸ்ஹைதராபாத் அணி தமக்கு வழங்கப்பட்டஇருபதுபந்து பரிமாற்றங்களில் 8 இலக்கினை இழந்து 137 ஓட்டங்களை மாத்திரம் பெற்று இருபது ஓட்டங்களால் போட்டியில் தோல்வியடைந்தது.

சன்ரைசஸ்ஹைதராபாத் அணி சார்பில் கேன் வில்லியம்சன் 57 ஓட்டங்களையும் ஜானி பேர்ஸ்டோவ் 23 ஓட்டங்களையும் அதிக படியாக பெற்றுக்கொடுத்தனர்

சென்னை அணி சார்பில் பந்து வீச்சில் டுவைன் பிராவோ,கர்ன் சர்மா ஆகியோர் தல இரண்டு விக்கட்டுகளை வீழ்த்தினார் இதேவேளை போட்டியின் ஆட்டநாயகனாக சென்னை அணியின் ரவீந்திரஜடேஜா தெரிவானார்